/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வீஸ் ரோட்டில் பள்ளம் வாகன ஓட்டுநர்கள் அவதி
/
சர்வீஸ் ரோட்டில் பள்ளம் வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜூன் 20, 2025 11:45 PM
கிணத்துக்கடவு,: கிணத்துக்கடவு அருகே, கல்லாங்காட்டுபுதூரில் சர்வீஸ் ரோட்டில் தனியார் பங்க் முன்பாக (கோவை வழி) கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில், நீர்க்கசிவு ஏற்பட்டது. அதிக அளவு நீர் ரோட்டில் வழிந்து ஓடியது. இதனால் மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, கூட்டு குடிநீர் திட்ட குழாய் சரி செய்யும் பணி நடந்தது. பணிகள் நிறைவடைந்த பின், அந்த குழியை முறையாக மூடாமல் விட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள், அப்பகுதியில் நிலை தடுமாறி செல்கின்றனர். பள்ளத்தில் மண் கொட்டி சரி செய்தாலும், பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் போது, மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, இப்பகுதியில் கான்கிரீட் அல்லது தார் கொண்டு, 'பேட்ச் ஒர்க்' பணி மேற்கொண்டு, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.