/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் அரிப்பு ஏற்பட்டதால் ரோட்டோரத்தில் பள்ளம்
/
மண் அரிப்பு ஏற்பட்டதால் ரோட்டோரத்தில் பள்ளம்
ADDED : மே 10, 2025 02:53 AM

கிணத்துக்கடவு : கோதாவடி செல்லும் வழித்தடத்தில், மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, ரோட்டோரத்தில் பள்ளமாகியுள்ளது.
கிணத்துக்கடவில் இருந்து கோதவாடி செல்லும் ரோட்டில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த ரோடு குறிப்பிட்ட தூரம் வரை இருவழித்தடமாகவும், மீதம் உள்ள ரோடு ஒரு வழித்தடமாகவும் உள்ளது.
இந்த ரோட்டில் பைக் முதல் லாரி போன்ற கனரக வாகனங்கள் வரை சென்று வருவதால், வாகன ஓட்டுநர்கள் பலருக்கு சிரமம் உள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், மண் அரிப்பு ஏற்பட்டு, ரோட்டின் ஓரத்தில் பள்ளமாகி உள்ளது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் இவ்வழித்தடத்தில் பயணிக்கும் போது, முன் செல்லும் வாகனத்தை 'ஓவர் டேக்' செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இதையும் மீறி 'ஓவர் டேக்' செய்யும் போது பள்ளத்தில் வாகனங்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே, வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த ரோட்டை விரிவுபடுத்த வேண்டும், மண் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.