/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு புறவழிச்சாலையில் பள்ளம்; மழைநீர் தேங்குவதால் பாதிப்பு
/
மேற்கு புறவழிச்சாலையில் பள்ளம்; மழைநீர் தேங்குவதால் பாதிப்பு
மேற்கு புறவழிச்சாலையில் பள்ளம்; மழைநீர் தேங்குவதால் பாதிப்பு
மேற்கு புறவழிச்சாலையில் பள்ளம்; மழைநீர் தேங்குவதால் பாதிப்பு
ADDED : ஜன 05, 2026 05:28 AM

புறவழிச்சாலையை கவனியுங்க! பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை ஜமீன் ஊத்துக்குளியில் துவங்கி, கோவை ரோடு சக்தி மில் அருகே நிறைவடைகிறது. இதில், கிருஷ்ணா குளம் அருகே ரோடு தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. பணி நிறைவடையும் முன்பே மழை நீர் தேங்கி, ரோடு சேதமடைய துவங்கியுள்ளது. அப்பகுதியில் ரோடு மட்டத்தை உயர்த்த வேண்டும்.
- சக்திவேல்: வாகனங்களால் இடையூறு பொள்ளாச்சி, எஸ்.எஸ்., கோவில் வீதியில் அதிகளவில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால், ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி ரோட்டில் 'பார்க்கிங்' செய்யும் வாகனங்களில் அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார்: சேதமடைந்த ரோடு கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டில் இருந்து பகவதிபாளையம் திரும்பும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், மழைநீர் தேங்கி இருப்பதால் இவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்கள் பள்ளத்தை கவனிக்காமல் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, இந்த ரோட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்க வேண்டும்.
- தங்கவேல்: ரோட்டோர புதரை அகற்றணும் கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில், அதிகளவு செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இதனால், ரோட்டின் வளைவு பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் திரும்பும் போது சிரமம் ஏற்படுகிறது. இதை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றம் செய்ய வேண்டும்.
-- கண்ணன்: காய்ந்த மரத்தால் அச்சம் செங்குட்டைபாளையத்தில் இருந்து பழனிக்கவுண்டன்புதூர் செல்லும் ரோட்டின் ஓரத்தில் காய்ந்த நிலையில் பெரிய மரம் உள்ளது. இந்த மரம் ரோட்டில் விழ வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே, இந்த மரத்தை அகற்ற வேண்டும்.
-- அய்யாசாமி: வேகத்தடை சீரமைப்பு கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சர்வீஸ் ரோட்டில் உள்ள வேகத்தடை சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் தாறுமாறாக செல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடையை புதுப்பிக்க வேண்டும்.
- முத்துக்குமார்: பாதியில் நிற்கும் பணி உடுமலை நகராட்சி பாபுகான் வீதியில், ரோடு போடுவதற்காக தோண்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார்: மேற்கூரை அமைக்கணும் உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், ரயில் நிற்கும் அளவுக்கு போதிய அளவில் நிழற்கூரை அமைக்கப்படவில்லை. எனவே, பயணியர் வெயிலில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே முழு அளவில் நிழற்கூரை அமைக்க ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜன்: நாய்த்தொல்லை உடுமலை ராஜேந்திரா ரோட்டில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால், அந்த ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே, நகராட்சியினர் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்: எரியாத தெருவிளக்குகள் உடுமலை கல்பனா ரோடு தெருவிளக்குகள் போதுமான அளவில் எரிவதில்லை. இதனால், அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. தெருவிளக்குகளை முழு அளவில் எரிவதற்கு மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவக்குமார்: குப்பையை அகற்றுங்க மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் ஆங்காங்கே குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுப்பிரமணி: ரோட்டை சீரமையுங்க உடுமலை அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம்:

