/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டும் குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி
/
குண்டும் குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 10, 2025 10:02 PM

பெ.நா.பாளையம்; கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்., மில்ஸ் பிரிவிலிருந்து சுப்ரமணியம்பாளையம் செல்லும் ரோடு, உருமாண்டம்பாளையம் ரோடு ஆகியன பழுதடைந்து உள்ளது.
இந்த ரோட்டை செப்பனிட்டு சீர்படுத்த, கோவை மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு, அதற்கான நிதியை ஒதுக்கியது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து, கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், 'இப்பகுதியில், 42 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டி உள்ளதால், சாலையை செப்பனிடும் பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றனர். தற்போது, 42 வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன.
ஆனால், சோதனை ஓட்டம் இன்னும் நடக்கவில்லை. சோதனை ஓட்டம் நடந்த பின்னரே சாலைகள் செப்பனிடும் பணி நடக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் இந்த சாலையை தினமும் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உருமாண்டம்பாளையம் ரோடு மற்றும் சுப்ரமணியம் பாளையம் ரோடு ஆகியவற்றை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.