sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 துடியலுார் ரோட்டில் வழியெங்கும் பள்ளம் தரமான சாலைக்கு ஏங்குது மக்கள் உள்ளம்

/

 துடியலுார் ரோட்டில் வழியெங்கும் பள்ளம் தரமான சாலைக்கு ஏங்குது மக்கள் உள்ளம்

 துடியலுார் ரோட்டில் வழியெங்கும் பள்ளம் தரமான சாலைக்கு ஏங்குது மக்கள் உள்ளம்

 துடியலுார் ரோட்டில் வழியெங்கும் பள்ளம் தரமான சாலைக்கு ஏங்குது மக்கள் உள்ளம்


ADDED : ஜன 14, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சரவணம்பட்டியில் இருந்து துடியலுார் 10 கி.மீ. துாரம் கொண்டது. கல்லுாரிகள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

சத்தி ரோட்டில் இருந்து துடியலுார் செல்வதற்கான முக்கியமான இணைப்பு சாலையாக இருப்பதால், இவ்வழித்தடத்தை எந்நேரமும் வாகனங்கள் பயன்படுத்துகின்றன.

அம்ரூத் திட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குழாய் பதிக்கப்பட்டது. அப்போது தோண்டிய இடங்களை, சரியாக மூடி ரோடு போடாததால் மேடு பள்ளமாக காணப்படுகிறது.

குழாய் பதித்த இடங்களில் 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டது. ஆனால், மார்ட்டின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள திருப்பத்தில், குழாய் பதித்த பகுதி பள்ளமாக இருக்கிறது. வாகனங்களில் செல்வோர், பள்ளத்தில் இறங்கி ஏறும் போது தடுமாறுகின்றனர். மின் விளக்கு இல்லாததால் இரவில் விபத்து அபாயம் இருக்கிறது.

வெள்ளக்கிணறு அம்மாசை கவுண்டர் வீதி, வேலப்பகவுன்டன்புதுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோட்டில் பெரிய பள்ளங்கள் உள்ளன. சரவணம்பட்டியில் இருந்து துடியலுார் வரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் 'பேட்ச் ஒர்க்' செய்வதற்காக 'வெட் மிக்ஸ்' கொட்டியிருக்கின்றனர். அதுவும் மாயமாகி விட்டது. ஜல்லிக்கற்கள் பரவிக்கிடக்கின்றன. குழியாலும், ஜல்லிக்கற்களாலும் விபத்து அபாயம் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில், 'பேட்ச் ஒர்க்' பணியை மாநகராட்சி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us