/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் பள்ளம் தினமும் விபத்து
/
ரோட்டில் பள்ளம் தினமும் விபத்து
ADDED : ஏப் 14, 2025 06:39 AM

கோவை: கோவை, ராம்நகர் அன்சாரி வீதியில் உள்ள, அதுல்யா அபார்ட்மென்ட் எதிரில், ரோட்டில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது.
சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கசிந்து குழியில் நிரம்புகிறது. இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு, குழி இருப்பது தெரிவதில்லை.
இதனால், குழிக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக விபத்து நடக்கிறது. இரு பக்கமும் குடியிருப்புகள் அமைந்துள்ள இந்த ரோட்டில், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கடந்து செல்கின்றன.
ரோட்டின் நடுவே உள்ள இந்த குழியால், ஒரு நாளில் பலமுறை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் விபத்து அதிகம் நடக்கிறது. அதனால் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து, குழியை நிரந்தரமாக மூடி, ரோட்டை சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.