/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழிகளால் விபத்து அபாயம்; ஓட்டுநர்கள் அச்சம்
/
குழிகளால் விபத்து அபாயம்; ஓட்டுநர்கள் அச்சம்
ADDED : மே 21, 2025 11:10 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி - உடுமலை ரோட்டோரம் கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள், முறையாக மூடப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் உள்ளன. போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் பொதுமக்கள் செல்ல சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
சர்வீஸ் ரோட்டோரம் கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படவில்லை. இதனால், விபத்து ஏற்படுகிறது என புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில்,'பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் பகுதியில் கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்படுகின்றன. அவை சரிவர மூடப்படாமல் அரைகுறையாக மூடப்படுகின்றன. இதை அறியாமல் வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
ரோட்டில் ஆங்காங்கே இதுபோன்ற குழிகள் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.