sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐந்து அதிசயங்களை கொண்ட கோவில்

/

ஐந்து அதிசயங்களை கொண்ட கோவில்

ஐந்து அதிசயங்களை கொண்ட கோவில்

ஐந்து அதிசயங்களை கொண்ட கோவில்


ADDED : பிப் 10, 2025 06:29 AM

Google News

ADDED : பிப் 10, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, அவரது காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்தது. அதனாலேயே பேரூரை மேலைச்சிதம்பரம் என்றழைக்கின்றனர். பட்டீஸ்வர லிங்கத்தின் மேற்பகுதியில் பசுங்கன்றின் கால் பட்ட தழும்பும், பசுமாட்டின் கொம்புகளால் பட்ட தழும்பும் உள்ளது.

இறவா பனை


கோவிலுக்கு வடமேற்கில் இறவாத பனை மரம் உள்ளது. பல ஆண்டுகாலமாக எப்போதும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிருக்கும் அதன் இலைகள் எப்போதும் பச்சையாகவே காணப்படும்.

இம்மரத்திற்கு இறப்பு என்பதே இல்லை என்று பேரூர் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பிறவா புளி-


பட்டீசுவரர் கோவில் வாசலுக்கு தென்கிழக்கில் பஸ்ஸ்டாண்ட்டிற்கு அருகே பிறவா புளிய மரம் உள்ளது. இந்தபுளியம் பழத்திலிருந்து வெளியே வரும் விதைகள் மீண்டும் முளைக்காது. தாவரவியல் விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் அந்த விதை முளைக்கவே இல்லை. அதனால் 'பிறவா புளி' என்று அழைக்கப்படுகிறது.

புழுக்காத சாணம்


இப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் சாணம் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றில் புழுக் க‍ள் உண்டாவதே இல்லை.

மனித எலும்பு கல்லாவது


பேரூர் சுற்றுவட்டாரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் வயோதிகத்தில் இயற்கை எய்திவிட்டால், இறுதிச்சடங்கு செய்து உடலை தகனம் செய்து விட்டபின் மீதமாகும் எலும்புகளை, நொய்யால் ஆற்றில் கரைத்துவிடுவார்களாம்.

அப்ப‍டி ஆற்றில் விடும் எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி விடுவதாக நம்பிக்கை.

வலது காது மேல் நோக்கி மரணிப்பது-


பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறந்து போகும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்த‍படி மரணக்கின்றன என்று தெரிகிறது.






      Dinamalar
      Follow us