/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டம்
/
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டம்
ADDED : செப் 22, 2024 11:54 PM

பொள்ளாச்சி,: பொள்ளாச்சி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம், சந்தைப்பேட்டை தனியார் ஓட்டல் அரங்கில் நடந்தது.
முன்னதாக, சங்கத்தலைவர் நடராஜன் தலைமை, செயலாளர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். சம்மேளனம் மாநில பொருளாளர் கோபால், துணை தலைவர் முத்துச்சாமி, கோவை - 6 சங்கத் தலைவர் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 75 வயது பூர்த்தியான உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தவிர, மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, பயனாளிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்; முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்துணைத்தலைவர் திருமலைச்சாமி, துணைச்செயலாளர் வாசு, பொருளாளர் ரங்கநாதன், சிறப்பு ஆலோசகர் ரகோத்தமன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.