ADDED : ஜூன் 01, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம் : நெகமம் கோட்டம் காமநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகப் பகிர்மானங்கள், பல்லடம் பகிர்மான வட்டத்திற்கு மாற்றப்படுவதாக, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெகமம் கோட்டத்திற்கு உட்பட்ட காமநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகத்தில் உள்ள மானாசிபாளையம், கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, மத்தநாயக்கன்பாளையம், காமநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய, 5 இடங்கள் நிர்வாக காரணங்களால், இன்று (2ம் தேதி) முதல் நெகமம் கோட்டத்தில் இருந்து பல்லடம் மின் பகிர்மான வட்டம் லட்சுமி நாயக்கன் பாளையம் பிரிவுடன் இணைக்கப்படும்.
எனவே, மின் நுகர்வோர்கள் இனி வரும் காலங்களில், மாற்றப்பட்ட மின் பகிர்மானத்தைச் சார்ந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, நெகமம் செயற்பொறியாளர், சங்கர் தெரிவித்தார்.