/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்விநியோக பாதை மறுசீரமைப்பு திட்டம்
/
மின்விநியோக பாதை மறுசீரமைப்பு திட்டம்
ADDED : ஜன 29, 2025 11:10 PM
கோவை; மின் இழப்புகளை தடுத்து, விநியோகத்தை சீராக்கும் நோக்கில், மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் களப்பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் மின் இழப்புகளை தடுத்தாலே, பெரும்பாலும் பற்றாக்குறையை சமாளித்துவிட முடியும். இந்நிலையில் மின் இழப்புகளை தடுக்கும் வகையில், மின் பாதைகள் சீரமைக்கப்படவுள்ளன.
அதாவது, விவசாய நிலங்களுக்கு பிரத்யேக மின்பாதை அமைத்தல், இரண்டு மின்மாற்றிகள் உள்ள இடங்களில் ஒன்றை, வேறு இடத்திற்கு சிறிய மின்மாற்றிகள் அமைத்தல், சிறிய அளவில் உயர் மின்னழுத்த வினியோக முறை என்ற மூன்று பிரிவுகளின் கீழ், சீரமைப்பு திட்டம் நடந்து வருகிறது.
இதுகுறித்து, கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணியிடம் கேட்டபோது, '' கோவையில், 305 மின்பாதைகள் சீரமைக்கப்படவுள்ளன. தற்போது களப்பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு, மூன்று மாதங்களில் பணிகள் துவங்கிவிடும்,'' என்றார்.

