/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்ணம்பாளையத்தில் விசைத்தறி சங்க கூட்டம்
/
கண்ணம்பாளையத்தில் விசைத்தறி சங்க கூட்டம்
ADDED : ஏப் 03, 2025 11:52 PM

சூலுார்; கண்ணம்பாளையத்தில் விசைத்தறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கண்ணம்பாளையம் வட்டார கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பாரதி வேலுசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். கூலி உயர்வு கேட்டு நடக்கும் வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான கூலி உயர்வை வழங்க வேண்டும். சட்ட பூர்வமான கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் செய்து வரும், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினருக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க தலைவர் கூறுகையில், ''உரிய கூலி கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் விசைத்தறி ஜவுளி தொழிலை பாதுகாக்க, உடனடியாக ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி புதிய கூலி உயர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

