/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறி ஒப்பந்த கூலி பிரச்னை; கோவையில் இன்று பேச்சுவார்த்தை
/
விசைத்தறி ஒப்பந்த கூலி பிரச்னை; கோவையில் இன்று பேச்சுவார்த்தை
விசைத்தறி ஒப்பந்த கூலி பிரச்னை; கோவையில் இன்று பேச்சுவார்த்தை
விசைத்தறி ஒப்பந்த கூலி பிரச்னை; கோவையில் இன்று பேச்சுவார்த்தை
ADDED : ஆக 11, 2025 11:11 PM
சோமனூர்; கோவை திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக முறையான கூலி உயர்வு கிடைக்காததால், கடந்த, மார்ச் 19ந்தேதி முதல், இரு மாவட்டங்களிலும் விசைத்தறி கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதையடுத்து, ஏப்., 20ம் தேதி நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், சோமனூர் பகுதி ரகங்களுக்கு, 15 சதவீதமும், மற்ற ரகங்களுக்கு, 10 சதவீத கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்ட பகுதிகளில் கூலி உயர்வு அமல்படுத்தப்பட்டது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, தெக்கலூர் பகுதிகளில் கூலி உயர்வு அமல்படுத்தப்படவில்லை. பல்வேறு முயற்சிகளை விசைத்தறியாளர்கள் எடுத்தும், எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அப்பகுதிகளில் விசைத்தறி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, கோவையில், தொழிலாளர் நலத்துறை கூடுதல் கமிஷனர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இதற்காக, சம்மந்தப்பட்ட பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.