/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீவிரமடைகிறது விசைத்தறி போராட்டம் சோமனுாரில் நாளை கடையடைப்பு
/
தீவிரமடைகிறது விசைத்தறி போராட்டம் சோமனுாரில் நாளை கடையடைப்பு
தீவிரமடைகிறது விசைத்தறி போராட்டம் சோமனுாரில் நாளை கடையடைப்பு
தீவிரமடைகிறது விசைத்தறி போராட்டம் சோமனுாரில் நாளை கடையடைப்பு
ADDED : ஏப் 14, 2025 04:34 AM

சோமனுார் : விசைத்தறியாளர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாளை கடையடைப்பு நடந்த உள்ளதாக, சோமனுர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
புதிய கூலி உயர்வு கோரி, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர், மார்ச் 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தால், பல கோடி ரூபாய்க்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த, 11ம் தேதி முதல், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து, மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
இதேபோல், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், எம்.எல்.ஏ., க்கள் கந்தசாமி, ஈஸ்வரன், கோவை வடக்கு மாவட்ட காங்., தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இந்நிலையில், சோமனூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நாளை, காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை கடையடைப்பு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

