/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூலி உயர்வு ஒப்பந்தம் கேட்டு விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
/
கூலி உயர்வு ஒப்பந்தம் கேட்டு விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
கூலி உயர்வு ஒப்பந்தம் கேட்டு விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
கூலி உயர்வு ஒப்பந்தம் கேட்டு விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஏப் 12, 2025 02:19 AM

சோமனூர்:புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று துவக்கினர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இரு மாவட்டங்களிலும் உள்ள, ஒன்றரை லட்சம் சாதா விசைத்தறிகள், கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்களுடன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில், நெசவு கூலி இறுதி செய்யப்பட்டு, விசைத்தறியாளர்கள் பெற்று வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்த கூலியை, ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கியதால், விசைத் தறியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர்.
இதையடுத்து, விசைத்தறியாளர் கூட்டமைப்பினர், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, சட்ட பாதுகாப்புடன் அதை அமல்படுத்த கோரி, மார்ச் 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த, ஐந்து நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை, சோமனுாரில் நேற்று துவக்கினர்.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.