/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
/
விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
ADDED : ஏப் 20, 2025 11:48 PM

கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் ஒரு மாதமாக, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஐந்து நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் விசைத்தறியாளர்கள் ஈடுபட்டனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன், மூன்று கட்டங்களாக பேச்சு நடந்தது.
இதில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் போராட்டம் தொடர்ந்தது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை, இறுதிக்கட்ட பேச்சு நடந்தது.
தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இறுதியில், கூலி உயர்வு பிரச்னையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

