/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூலி உயர்வு பிரச்னையில் தீர்வு காண காலதாமதம்; விசைத்தறியாளர்கள் அதிருப்தி
/
கூலி உயர்வு பிரச்னையில் தீர்வு காண காலதாமதம்; விசைத்தறியாளர்கள் அதிருப்தி
கூலி உயர்வு பிரச்னையில் தீர்வு காண காலதாமதம்; விசைத்தறியாளர்கள் அதிருப்தி
கூலி உயர்வு பிரச்னையில் தீர்வு காண காலதாமதம்; விசைத்தறியாளர்கள் அதிருப்தி
ADDED : ஏப் 17, 2025 11:21 PM

சோமனுார்; புதிய கூலி உயர்வு பிரச்னையில் தீர்வு காண காலதாமதம் ஆவதால் விசைத்தறியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சட்ட பாதுகாப்புடன் கூடிய புதிய கூலி உயர்வு கேட்டு, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர், கடந்த, 30 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 1.50 லட்சம் விசைத்தறி கள் இயங்கவில்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும், 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 750 கோடி ரூபாய்க்குமேல் காடா துணி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அச்சு பிணைத்தல் உள்ளிட்ட சார்பு தொழில்கள், சைசிங் நிறுவனங்கள், ஓ.இ., மில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
18 முறைக்கும் மேல் கூலி உயர்வு குறித்த பேச்சு நடந்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால், வேலை நிறுத்தத்தை தொடர்வதுடன், 11 விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சோமனூர் சங்க தலைவர் பூபதி கூறுகையில், ''உடலை வருத்திக் கொண்டு, 11 விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
பேச்சு நடத்தி தீர்வு காண்பதில் வீண் காலதாமதம் ஏற்படுவது விசைத்தறியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும், என்பதே எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது,'' என்றார்.