/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்; மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை
/
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்; மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்; மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்; மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : அக் 16, 2024 08:56 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை, விபத்து ஏற்படும் முன், மாற்றியமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில், அதிகரிக்கும் வாகனங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப நகர சாலைகள் விசாலமாக இல்லாதது பெரும் குறையாக உள்ளது. ஆனால், இருக்கும் இந்த சாலைகளையும் முழுமையாக பயன்படுத்த முடியாமல், ஆக்கிரமிப்பு, 'பார்க்கிங்' விதிமீறல் என, இடையூறு ஏற்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, சில சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களாலும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வகையில், மகாலிங்கபுரம் ஈஸ்வரன் கோவில் வீதியில், சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
இரவு நேரங்களில் வேகமாக வாகனங்களில் செல்வோர், மின்கம்பம் மீது மோதி விபத்து உள்ளாகும் நிலையும் உள்ளது. இதுபோன்று, நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களைக் கண்டறிந்து, அகற்றி மாற்றிமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
நகரச் சாலையில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் இடம் வரை முன்னோக்கி சாலையோர வியாபாரிகள், தனியார் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர். நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் புதிய சாலைகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு, அகற்றப்படாத மின்கம்பங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.