sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின் கம்பம் அகற்றம்

/

மின் கம்பம் அகற்றம்

மின் கம்பம் அகற்றம்

மின் கம்பம் அகற்றம்


ADDED : செப் 26, 2024 11:44 PM

Google News

ADDED : செப் 26, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம், : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், நாயக்கன்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சி அலுவலக நுழைவு வாயில் அருகே மின் கம்பம் இருந்தது.

போக்குவரத்துக்கு சிரமமாக உள்ள மின்கம்பத்தை அகற்ற ஊராட்சி சார்பில் மின்சார வாரியத்திற்கு தொகை செலுத்தி, பல நாட்கள் ஆகியும் மின் கம்பம் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் அலுவலக வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான தளவாட சாமான்களை கொண்டு வரவும், எடுத்துச் செல்லவும் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அவசர, அவசரமாக வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை அகற்றி ரோட்டோரமாக வைத்து விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து, நாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் சின்னராஜ் கூறுகையில், தினமலர் நாளிதழில் செய்தி வெளியானவுடன் மின்கம்பம் அகற்றப்பட்டு விட்டது. தினமலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us