/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரான்ஸ்பார்மரை தாங்கும் மின் கம்பங்கள் சேதம்
/
டிரான்ஸ்பார்மரை தாங்கும் மின் கம்பங்கள் சேதம்
ADDED : ஜன 20, 2026 05:22 AM

சூலூர்: டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், கே.என்.கே. நகர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சி ரங்கநாதபுரம் கே.என்.கே. நகர் இரண்டாவது வீதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதை தாங்கி நிற்கும் இரு மின் கம்பங்களும் சேதமடைந்து , கம்பிகள் வெளியில் தெரிகின்றன. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வலுவிழந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நாளுக்கு நாள் கம்பங்கள் வலுவிழந்து வருகின்றன.
எந்நேரம் உடைந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன், அக்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

