ADDED : ஜூலை 06, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில் நடந்த மின் துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது.
மின்துறையின் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு, தடகள போட்டிகள் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா, கோவையில் நடந்தது.
போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, சென்னை மண்டல அணி வென்றது. வெற்றி பெற்ற பல்வேறு மண்டல அணிகளுக்கும், வீரர்களுக்கும் கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
கோவை தலைமை பொறியாளர் (பகிர்மானம்) சுப்ரமணியன் வரவேற்றார். தமிழக மின் தொடரமைப்பு கழக நிர்வாக இயக்குனர் இந்திராணி, மின்துறை இயக்குனர் மாஸ்கர்னஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.