/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி பி.பி.ஜி., எஸ்.ஆர்.ஐ.டி., அணிகள் வெற்றி

ADDED : ஆக 10, 2025 10:48 PM

பெ.நா.பாளையம், ; துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், கிரிக்கெட் போட்டி துவங்கியது.
இப்போட்டி வரும் 15ம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. 20 இன்ஜினியரிங் கல்லூரி அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டியை முன்னாள் மாணவர் பிரசாந்த், கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அனைத்து போட்டிகளும், நாக்அவுட் முறையில் நடக்கின்றன.
போட்டிகள், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மைதானங்களில் நடக்கின்றன.
நேற்றைய போட்டியில், பி.பி.ஜி., கல்லூரி அணி, எஸ்.என்.எஸ்., கல்லூரி அணியை வென்றது. இரண்டாவது போட்டியில் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி அணி, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அணியையும், மூன்றாவது போட்டியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி அணியையும், நான்காவது போட்டியில், பார்க் இன்ஜினியரிங் கல்லூரி அணி, காரமடை ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரி அணியையும், ஐந்தாவது போட்டியில், சி.ஐ.இ.டி., கல்லூரி அணி, யு.ஐ.டி., கல்லூரி அணியையும் வென்றது.
போட்டி ஏற்பாடுகளை, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் நித்யானந்தன் செய்து வருகிறார்.