தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயர்தர ஆய்வகங்களில் செயல்வழி கல்வி

 உயர்தர ஆய்வகங்களில் செயல்வழி கல்வி

 உயர்தர ஆய்வகங்களில் செயல்வழி கல்வி


ADDED : பிப் 28, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பா ப்பம் பட்டி, ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உயர்தர ஆய்வகங்களில், செயல்வழிகல்வி கற்று தரப்படுகிறது.

பள்ளி செயல்பாடுகள் குறித்து, தாளாளர் வைத்தியநாதன் கூறியதாவது: எங்கள் பள்ளியில் நியாயமான கட்டணத்தில், உலகத்தரம் வாய்ந்த கல்வியை 25 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தொடர்ந்து 10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், நுாறு சதவீத தேர்ச்சியுடன், முதன்மை பாடங்களில் அதிக மாணவர்கள் சென்டம் பெற்று வருகின்றனர்.

ஒன்று, இரண்டாம் வகுப்புகளுக்கு, ஆங்கிலம், கணித ஆய்வகங்களில், அடிப்படை கற்றல் பயிற்சி அளிக்கிறோம். மூன்றாம் வகுப்பு முதல், ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, ஸ்டெம், அடல் திங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். அனைத்து வகுப்புகளுக்கும், இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளன. ஜே.இ.இ., நீட் நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கிறோம். கல்வியுடன் இணை செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாடம் சார்ந்த கூடுதல் விஷயங்களை தெரிந்து கொள்ள களப் பணி அழைத்து செல்கிறோம். உயர்கல்வி படிப்புகளுக்கு, அந்தந்த துறை வல்லுநர்கள் உதவியோடு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிநடத்துகிறோம். நிறைய கல்லுாரிகளுக்கு அழைத்து செல்கிறோம். கிராமப்புற மாணவர்களுக்கும்,சிறந்த கற்றல் அனுபவங்களைஏற்படுத்தி தர, பல்வேறு செயல் பாடுகள் மேற்கொள்கிறோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us