/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிப்.,யில் செய்முறை தேர்வு: பணி ஒதுக்கீடுகள் நிறைவு
/
பிப்.,யில் செய்முறை தேர்வு: பணி ஒதுக்கீடுகள் நிறைவு
பிப்.,யில் செய்முறை தேர்வு: பணி ஒதுக்கீடுகள் நிறைவு
பிப்.,யில் செய்முறை தேர்வு: பணி ஒதுக்கீடுகள் நிறைவு
ADDED : ஜன 29, 2025 08:44 PM
பொள்ளாச்சி; செய்முறைத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அவர்களுக்கான பணி ஒதுக்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக, பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3ல் துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக, பிப்., 7 முதல், 14க்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், செய்முறைத் தேர்வுகளை நடத்த ஆய்வகம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல, செய்முறைத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அவர்களுக்கான பணி ஒதுக்கீடு இறுதி செய்யப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள துணைத் தேர்வு இயக்ககம் வாயிலாக, தலைமையாசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி வினாத்தாள் அளிக்கப்படவும் உள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
துணைத் தேர்வு இயக்ககம் வாயிலாக பெறப்படும் வினாத்தாள்கள், தலைமையாசியர் வசம் பாதுகாப்புடன் இருக்கும். செய்முறைத் தேர்வு நாளன்று, காலை, 'எக்ஸ்டேனல்' ஆசிரியர் முன்னிலையில், 'சீல்' உடைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மாணவர் எண்ணிக்கை அதிகம் கொண்ட பள்ளிகளில், காலை மற்றும் மதியம் என, இரு பிரிவுகளாக, செய்முறைத் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிந்தவுடன் திருத்தம் செய்து மதிப்பெண்கள், எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
அனைத்து தேர்வுகளும் முடிந்தபின், விடைத்தாள்கள் மொத்தமாக, மீண்டும் துணைத் தேர்வு இயக்ககத்திடம் ஒப்படைக்கப்படும். தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டும் வருகிறது. இதுதவிர, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிப்., 15 முதல், 21ம் தேதிக்குள், 10ம் வகுப்புக்கு பிப்., 22 முதல் 28ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.