/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு துவக்கம்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு துவக்கம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு துவக்கம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு துவக்கம்
ADDED : பிப் 12, 2024 12:23 AM
- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இங்குள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி, நகராட்சி மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 3,345 மாணவர்கள், 4,045 மாணவியர் என மொத்தம், 7,390 பேர் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
இவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில் சார்ந்த பாடங்களுக்கான செய்முறை தேர்வு இன்று முதல் துவங்கி, 23ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடக்கிறது.
மொத்தம், 75க்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கும் செய்முறைத்தேர்வில், மாணவர்கள், 3,127, மாணவியர், 3,705 என மொத்தம், 6,832 பேர் பங்கேற்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வுகள் துவங்குகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் துவங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறைத்தேர்வுகள், சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது.
இன்று (12ம் தேதி) துவங்கி, 17ம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கும், வரும் 19ம் தேதி முதல் 24 வரை பிளஸ் 1 மாணவர்களுக்கும் செய்முறைத்தேர்வு நடக்கிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 26, 27, 28ம் தேதிகளில் செய்முறைத் தேர்வு நடக்கிறது. உடுமலையில், மொத்தமாக 30 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும், பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிலும் தேர்வு நடக்கிறது.
தேர்வு நடக்கும் பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக செயல்படுகின்றனர்.
செய்முறைத்தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம், திருப்பூரில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசியதாவது: செய்முறை தேர்வுக்கு முன் ஆய்வகம் தயாராக வைப்பது, ஆசிரியருக்கு பணி புற, அக மதிப்பீட்டாளர்கள் பணி குறித்து முன்கூட்டியே தலைமையாசிரியர் தெரிவித்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு முன் பதட்டம், அவசரமாக பணி செய்யக்கூடாது. பிற பள்ளிகளில் இருந்து வரும் மாணவ, மாணவியர் பாதுகாப்பாக, கவனமுடன் தேர்வுத்துறை சென்று திரும்புவது உறுதி செய்ய வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடுவோர் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.