/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்திரமாக பட்டாசு வெடிக்க பள்ளியில் செயல் விளக்கம்
/
பத்திரமாக பட்டாசு வெடிக்க பள்ளியில் செயல் விளக்கம்
பத்திரமாக பட்டாசு வெடிக்க பள்ளியில் செயல் விளக்கம்
பத்திரமாக பட்டாசு வெடிக்க பள்ளியில் செயல் விளக்கம்
ADDED : அக் 29, 2024 09:14 PM

கோவை: ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் பள்ளியில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீயணைப்புத்துறை சார்பில், தீ விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தீ தடுப்பு குழு முன்னணி தீயணைப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், துண்டு பிரசுரங்கள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீ தடுப்பு வழிமுறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, 'தரமான பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும். குழந்தைகள், பெற்றோர் முன்னிலையில் பட்டாசு வெடிப்பது பாதுகாப்பானது. பட்டாசு வெடித்து உடலில் தீக்காயம் ஏற்பட்டால், உடனே குளிர்ந்த நீரை தீக்காயத்தின் மீது, எரிச்சல் அடங்கும் வரை ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
பட்டாசுகளை கையில் வீசி விளையாடாதீர்கள்' என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில், 250 மாணவியர், 20 ஆசிரியர்கள் பயன்பெற்றனர்.

