/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பாடத்திட்டத்தில் செய்முறை பயிற்சியை அதிகரிக்க வேண்டும்'
/
'பாடத்திட்டத்தில் செய்முறை பயிற்சியை அதிகரிக்க வேண்டும்'
'பாடத்திட்டத்தில் செய்முறை பயிற்சியை அதிகரிக்க வேண்டும்'
'பாடத்திட்டத்தில் செய்முறை பயிற்சியை அதிகரிக்க வேண்டும்'
ADDED : மார் 01, 2026 06:12 AM

வடவள்ளி: பாரதியார் பல்கலை சார்பில், தேசிய அறிவியல் தின விழா, பல்கலை அரங்கத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், பதிவாளர் ராஜவேல் வரவேற்பு உரையாற்றினார். அண்ணாமலை பல்கலை முன்னாள் துணைவேந்தர் மணியன், பெரியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேல், திருவள்ளுவர் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அறிவியல் துறையில், சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், அண்ணாமலை பல்கலை முன்னாள் துணைவேந்தர் மணியன் பேசியதாவது:
நமது பாடத்திட்டம் பெரும்பாலும், 60 சதவீதம் கோட்பாடு. 40 சதவீதம் செய்முறை பயிற்சி அடங்கியது.
செய்முறை பயிற்சி மூலம்தான் மாணவர்கள் முழுமையாக கற்றுக் கொள்வார்கள். எனவே, 60 சதவீதம் செய்முறை பயிற்சி மற்றும் 40 சதவீதம் கோட்பாடு என நமது பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்.
தொழிற்சாலைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நமது தேர்வு முறை, உண்மையான திறமையான மாணவர்களை கண்டறிவதில் தோல்வியடைகிறது. மதிப்பெண் பெறுபவர்களில் பலர் மனப்பாடம் செய்து உயர் மதிப்பெண் பெறுகிறார்கள். புதிய சிந்தனைகளுடைய மாணவர்கள், மனப்பாடம் செய்வதில்லை.
எடுத்துக்காட்டாக, தாமஸ் ஆல்வா எடிசன், மிகவும் வேகமாக மொழிகளை கற்றுக்கொண்டார். ஆனால், அவர் 12 வாரங்களே பள்ளி கல்வி கற்றார். பின்னாளில், வரலாற்றில் அழிக்க முடியாத விஞ்ஞானியானார். நம் நாட்டில், ஏராளமான திறமையானவர்கள் உள்ளனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.

