ADDED : பிப் 24, 2026 05:08 AM

அ நிறம் | அளவு
கோவை: கோவையிலுள்ள 1,212 பள்ளிகளில், 300 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நேற்று நடந்தன.
இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் செய்முறை பயிற்சி தேர்வு நடந்தது. இதில் தலா 5 மதிப்பெண்கள் வீதம், 20 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இது தவிர அகமதிப்பீடு, செய்முறை பயிற்சி புத்தகம் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில், 5 மதிப்பெண் என்று மொத்தம், 25 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
செய்முறை தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் வழிகாட்டுதல்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வெளியிட்டனர்.
