/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று துவக்கம்
/
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று துவக்கம்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று துவக்கம்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று துவக்கம்
ADDED : பிப் 23, 2026 05:24 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு இன்று (23ம் தேதி) துவங்குகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 8,639 மாணவர்கள், தனித்தேர்வர்கள், 114 பேர் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு இன்று (23ம் தேதி) முதல், 28ம் தேதி வரை நடக்கிறது. இரண்டு பகுதிகளாக செய்முறைத்தேர்வுகள் நடைபெறுகின்றன.
இன்று முதல், 25ம் தேதி வரை முதற்கட்டமும், 26ம் தேதி முதல், 28ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெறும். மொத்தம், 89 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. தனித்தேர்வர்கள், பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்களும், பதிவேடுகளுடன் பங்கேற்க வேண்டும். இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.