/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 17, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : பிளஸ் 2 பொது தேர்வில், சிறப்பான மதிப்பெண் எடுத்த பத்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, போலீஸ் கமிஷனர் ஊக்கத்தொகை வழங்கினார்.
நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அன்னை அறக்கட்டளை சார்பில், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் மாநகராட்சி பள்ளியில் பயின்று, 600க்கு 540 மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஊக்கத்தொகை வழங்கி, மாணவர்களை பாராட்டினார்.

