ADDED : செப் 23, 2026 06:13 PM

அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, உருளிக்கல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தா,60. எஸ்டேட்டில் தொழிலாளியான இவர் நேற்று ேஷக்கல்முடியில் இருந்து வால்பாறைக்கு அரசு பஸ்சில் வந்தார். காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது, 14,207 ரூபாயை பஸ்சில் தவறவிட்டதை அறிந்தார். உடனடியாக அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரை சந்தித்து விபரத்தை கூறினார்.
இதனிடையே, பஸ்சில் பயணி தவறவிட்ட பணத்தை டிரைவர் தங்கவேலு, கண்டக்டர் சிவக்குமார் ஆகியோர், கிளை மேலாளர் சுப்ரமணியத்திடம் வழங்கினர். அதன்பின், முத்தாத்தாவை வரவழைத்து, பணப்பையை ஒப்படைத்தார். பஸ் ஊழியர்களின் நேர்மைக்கு, கிளை மேலாளர் மற்றும் சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
