/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருடனை துரத்தி பிடித்த போலீசாருக்கு பாராட்டு
/
திருடனை துரத்தி பிடித்த போலீசாருக்கு பாராட்டு
ADDED : ஆக 23, 2025 02:45 AM

கோவை: நேற்று அதிகாலை அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 'ஸ்மார்ட் காக்கி' போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த பைக்கை நிறுத்த சைகை செய்தனர். பைக்கை ஓட்டி வந்தவர் நிற்காமல் சென்றார். போலீசார் அந்த பைக்கை துரத்திச் சென்று பிடித்தனர்.
விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், 36 என தெரிந்தது. கோவை ஆவாரம்பாளையத்தில் நடந்த, பைக் திருட்டில் தொடர்புடையவர்; ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது. அவர் மாநகர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இரவு பணியில் திறம்பட செயல்பட்ட ரோந்து போலீசார் தாமோதரன், ஏட்டு கோவிந்தராஜ் ஆகியோரை, எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டினார்.

