/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினக்கூலி உயர்வுக்கு காரணமான தொழிற்சங்கத்தினருக்கு பாராட்டு
/
தினக்கூலி உயர்வுக்கு காரணமான தொழிற்சங்கத்தினருக்கு பாராட்டு
தினக்கூலி உயர்வுக்கு காரணமான தொழிற்சங்கத்தினருக்கு பாராட்டு
தினக்கூலி உயர்வுக்கு காரணமான தொழிற்சங்கத்தினருக்கு பாராட்டு
ADDED : நவ 03, 2025 11:43 PM

வால்பாறை: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான தினக்கூலியை உயர்த்தி பெற்றுத்தந்த தொழிற்சங்க தலைவருக்கு, தொழிலாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில், தினக்கூலியாக,475 ரூபாய் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனையடுத்து, தினக்கூலியை உயர்த்தி பெற்றுத்தந்த அ.தி.மு.க., தொழிற்சங்க தலைவருக்கு தொழிலாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மார்க்கெட் பகுதியில் உள்ள ஏ.டி.பி., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த விழாவில், மாநில தலைவர் அமீது பேசியதாவது:
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் தினக்கூலியாக, 475 ரூபாய் வீதம் வழங்கப்படும். இனி, தினமும், 55 கிலோ தேயிலை பறித்தால் போதுமானது. அதற்கு மேல் பறிக்கும் ஒவ்வொரு கிலோவிற்கு, 1.50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, புதிய சம்பள ஒப்பந்தப்படி தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசுக்கு சொந்தமான 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 443 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே, டான்டீ தொழிலாளர்களுக்கான புதிய சம்பள பேச்சு வார்த்தை விரைவில் நடத்தி, தினக்கூலியை உயர்த்த வேண்டும். வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடும்.
இவ்வாறு, பேசினார்.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஜெ. பேரவை சார்பில், 35 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சிங், தொழிற்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வசந்த், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

