/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை நீர் வடிகால் வசதி இல்லை; வாகன ஓட்டுநர்கள் அவதி
/
மழை நீர் வடிகால் வசதி இல்லை; வாகன ஓட்டுநர்கள் அவதி
மழை நீர் வடிகால் வசதி இல்லை; வாகன ஓட்டுநர்கள் அவதி
மழை நீர் வடிகால் வசதி இல்லை; வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : நவ 03, 2025 11:43 PM

ரோட்டோரத்தில் குழி பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் அருகே ரோட்டோரம் வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் சென்று பள்ளம் போன்ற குழி ஏற்பட்டுள்ளது. இதனால் ரோட்டோரத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். எனவே, ரோட்டோரம் மணல் கொட்டி சரி செய்ய வேண்டும்.
-- மோகன்: ரோடு சேதம் பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் முன்பாக மெயின் ரோட்டில் வளைவு பகுதியில் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இரவு நேரத்தில் சிலர் கீழே விழுகின்றனர். அனைத்து துறை அதிகாரிகளும் இந்த ரோட்டில் தான் செல்கின்றனர். மக்களின் சிரமத்தை உணர்ந்து இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- டேனியல்: மின்கம்பம் அகற்றப்படுமா? குருநல்லிபாளையம் கிராமத்தில் ரோட்டின் நடுவே மின்கம்பம் இருப்பதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் இவ்வழியாக வரும்போது கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, மின்வாரியத்தினர் இதை கவனித்து மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.
-- கண்ணன்: சுகாதாரம் பாதிப்பு பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி அருகே உள்ள வஞ்சியாபுரம் பிரிவில், ரோட்டோரம் அதிகளவு குப்பை கொட்டப்பட்டு இருப்பதால் சுகாதாரம் பாதித்துள்ளது. இது மட்டுமின்றி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக குப்பையை அகற்றம் செய்ய வேண்டும்.
-- ரஞ்சித்: ரோட்டில் இடையூறு வடசித்தூர் -- நெகமம் ரோட்டில், அதிகளவு வளைவுப் பகுதிகள் உள்ளது. இந்த ரோட்டில் ஆங்காங்கே தென்னை மட்டைகள் மற்றும் ஓலைகள் கிடப்பதால், வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே, ரோட்டில் கிடக்கும் மட்டை மற்றும் ஓலைகளை அகற்ற வேண்டும்.
-- பிரகாஷ்: சேதமடைந்த ரோடு உடுமலை -- திருப்பூர் ரோட்டிலிருந்து அய்யம்பாளையம் புதூர் செல்லும் ரோடு கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுப்பிரமணி: நிழற்கூரை வசதியில்லை உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பயணியர் காத்திருக்க நிழற்கூரை வசதியில்லாததால், திறந்த வெளியில் வெயிலில் காத்திருக்க வேண்டியதுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே நகராட்சியினர் நிழற்கூரை வசதி செய்து தர வேண்டும்.
- கார்த்திக்: பராமரிப்பு இல்லை உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பின்றி குப்பை, கூளம் நிறைந்து காணப்படுகிறது. இதனால், இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அந்த நிழற்கூரையை பராமரித்து, நகராட்சியினர் சுத்தம் செய்ய வேண்டும்.
- செல்வம்: மேம்பாலம் கட்டணும் உடுமலை - கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில், ரயில் செல்லும் போது பல முறை மூடப்படுகிறது. இதனால், அந்த ரோட்டில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி: ஆக்கிரமிப்புகளால் இடையூறு உடுமலை உழவர்சந்தை ரோட்டில், காலை நேரங்களில் தற்காலிக கடைகள் போடப்படுகின்றன. அப்போது பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.
- மோகன்: பணியை விரைந்து முடியுங்க உடுமலை -- தாராபுரம் ரோடு நான்கு வழி சாலைக்காக, பாலம் கட்டும் இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. விபத்துக்களை தடுக்க, பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோமசுந்தரம்:

