ADDED : டிச 17, 2025 06:33 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் குடில்கள் அமைத்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும், 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்தே கிறிஸ்தவர்கள், வீடுகளில் குடில்கள் அமைத்து பக்தி பாடல்கள் பாடியும், சிறப்பு பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
அதில், பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி ராமு அவென்யூவில் உள்ள ஓய்வு பெற்ற எஸ்.ஐ. மைக்கேல் சகாயராஜ் வீட்டில் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடந்தது. அதில், புனித லுார்து அன்னை ஆலயத்தை சேர்ந்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், கிறிஸ்தவர்கள், ஒவ்வொருவரும், தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து ஒருவொருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
