/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை; நகராட்சி அதிகாரிகள் தீவிரம்
/
மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை; நகராட்சி அதிகாரிகள் தீவிரம்
மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை; நகராட்சி அதிகாரிகள் தீவிரம்
மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை; நகராட்சி அதிகாரிகள் தீவிரம்
ADDED : டிச 01, 2024 10:53 PM

பொள்ளாச்சி; அதிகளவு மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், மூன்று நாட்களுக்கு மிதமான அல்லது அதிகளவு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து, பொள்ளாச்சியில், சின்னாம்பாளையத்தில் இருந்து வரக்கூடிய ஓடை நகரின் மையப்பகுதி வழியாக செல்வதால் அதிகளவு நீர் வரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் கணேசன்கூறியதாவது:
சின்னாம்பாளையம் ஊராட்சியில் இருந்து வரும் ஓடை, நகராட்சியின் பொட்டுமேடு வழியாக மரப்பேட்டை, தன்னாட்சியப்பன் கோவில் வீதி, நேருநகர், பெரியார் காலனி, கிழக்கு, மேற்கு, நடராஜர் மணியகாரர் காலனி, அண்ணா காலனி ஆகிய நகரின் முக்கிய பகுதி வழியாக சென்று கண்ணப்பன் நகர் வழியாக வெளியேறுகிறது.
இந்த ஓடைகளில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் துார்வாரப்பட்டு தற்போது மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. நந்தனார் காலனி, மரப்பேட்டை பகுதியில், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகாமல் இருக்க, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளக்காலங்களில் தாழ்வான பகுதியில் வசிப்போர், தங்குவதற்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.வெள்ள நிவாரண காலங்களில், மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.