/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள்
/
முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள்
முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள்
முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள்
ADDED : அக் 31, 2024 10:32 PM

கோவை, ; தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நேற்று பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது தீவிபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் பணியாற்றுகின்றனர்.
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தீயணைப்புத் துறையினர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும் பொது மக்களுக்கு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
இதையடுத்து, நேற்று கோவை உக்கம், காட்டூர், சாய்பாபா காலனி மற்றும் சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு வாகனத்திற்கு பகலில் ஆறு தீயணைப்பு வீரர்கள், ஒரு அலுவலர் மற்றும் இரவில் ஆறு வீரர்கள், ஒரு அலுவலர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.