/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தால் கர்ப்பிணிகள் சிரமம் பேரூர் பச்சாபாளையத்தில்தான் இந்த அவலம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தால் கர்ப்பிணிகள் சிரமம் பேரூர் பச்சாபாளையத்தில்தான் இந்த அவலம்
ஆரம்ப சுகாதார நிலையத்தால் கர்ப்பிணிகள் சிரமம் பேரூர் பச்சாபாளையத்தில்தான் இந்த அவலம்
ஆரம்ப சுகாதார நிலையத்தால் கர்ப்பிணிகள் சிரமம் பேரூர் பச்சாபாளையத்தில்தான் இந்த அவலம்
ADDED : மே 18, 2025 11:01 PM

சேறும், சகதியுமான ரோடு
வெள்ளக்கிணறு, இரண்டாவது வார்டு, சவுடாம்பிகா நகர், ராகவேந்திரா கார்டன் சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும், பாதாள சாக்கடை அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்த இடங்களில் பள்ளங்களை சரியாக மூடி, தார்சாலை அமைக்கவில்லை. எங்கும் மண் குழிகளாக உள்ள சாலையில், மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது.
- ராஜா, வெள்ளக்கிணறு.
அடிக்கடி விபத்து
கஸ்துாரிநாயக்கன்பாளையம், நேருநகரில், சாலை முழுவதும் குழிகளாக உள்ளது. மழைநீர் தேங்கி நிற்கும் போது, குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து நடக்கிறது. குழிகளால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
- சாய் பிரணீத், நேருநகர்.
வீணாகும் குடிநீர்
சிவில் ஏரோட்ரோம் போஸ்ட், பூங்கோதை நகர், இரண்டாவது வீதி, பி.எம்.ஆர்., லே அவுட், சைட் நம்பர் ஒன்றில், சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக பைப்லைன் போடப்பட்டது. இதில், உடைப்பு ஏற்பட்டு கடந்த 40 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- நந்தா, கோல்டுவின்ஸ்.
துரத்தும் நாய்கள்
வடவள்ளி, 38வது வார்டு, சுப்பிரமணியம் நகர், குடியிருப்பு புகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சாலையில் நடந்து செல்லும் பெரியவர்கள், குழந்தைகளை, துரத்தி அச்சுறுத்துகின்றன. இரவில் தெருக்களில் நடக்கவே முடியவில்லை.
- வாணி, வடவள்ளி.
ரோடெல்லாம் குப்பை
மருதமலை பேருந்து நிலையம், போதிய பாராமரிப்பின்றி குப்பை நிறைந்து காணப்படுகிறது. பேருந்து எதிரே சாலையோரத்தில், அதிகளவு குப்பை குவிந்துள்ளது. தொட்டிகளில் குப்பை நிரம்பி, சாலையில் சிதறிக்கிடக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- புவனேஸ்வரி, மருதமலை.
புதர்மண்டிய கால்வாய்
ஹோப்காலேஜ், 58வது வார்டு, துளசியம்மாள் லே- அவுட் முதலில், சாக்கடைக் கால்வாயில் கட்டடக்கழிவு, குப்பை கொட்டப்பட்டு நிரம்பி உள்ளது. புதர்மண்டி கிடக்கும் கால்வாயை, முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
- ரேணுகா, ஹோப்காலேஜ்.
விபத்தை தடுக்க தடுப்புகள்
மதுக்கரை மெயின் ரோடு, காமராஜர் நகர் பகுதியில், இணைப்புச் சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வருவதற்கும், பிரதான சாலையில் இருந்து இணைப்புச் சாலைக்கு செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. சாலையின் நடுவே தாண்டுவதற்கு உரிய பகுதியில் தடுப்புகள் வைக்க வேண்டும்.
- கார்த்திக், சுந்தராபுரம்.
குழாய் உடைப்பு
செல்வபுரம், என்.எஸ்.கே., வீதி வளைவில், குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாகிறது. தினமும் ஆயிரம் லிட்டர் வீணாவது குறித்து, பலமுறை முறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- சங்கர், செல்வபுரம்.
கர்ப்பிணிகளுக்கு சிரமம்
பேரூர் செட்டிபாளை யம், பச்சாபாளையம், காந்தி நகர் துணை சுகாதார நிலையத்தில், சாக்கடை கால்வாய் சிலேப்கள் உடைந்துள்ளன. இதனால், சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, கர்ப்பிணிகள் கால்வாயை தாண்டி செல்ல கஷ்டப்படுகின்றனர். உடைந்த சிலேப்பை விரைவாக சரிசெய்ய வேண்டும்.
- சுப்பிரமணியன், பச்சாபாளையம்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
சத்தி ரோடு, கணபதி, சி.எம்.எஸ்., பள்ளி அருகில் இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதல் அத்திபாளையம் பிரிவு வரை, நடந்து செல்லவே பாதை இல்லாத வகையில், விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டியிருப்பதால், அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடக்கிறது.
- முத்துக்குமார், கணபதி.