/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்த சேவைக்கான எண் '104' செய்தித்துறை மறுப்பு
/
ரத்த சேவைக்கான எண் '104' செய்தித்துறை மறுப்பு
ADDED : மார் 18, 2025 04:21 AM
கோவை : சமூக வலைத்தளங்களில் ரத்த தானம் தொடர்பான பொய்யான தகவல், 'கால் ஆன் பிளட்' என்ற பெயரில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய அரசு புதிய திட்டத்தைத் தொடங்கியிருப்பதாகவும், 104 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால், 4 மணி நேரத்தில் நாம் இருக்கும் இடம் தேடி ரத்தம் வந்து சேரும். ரத்தம் ஒரு யூனிட் 450 ரூபாய்.
போக்குவரத்துக் கட்டணம் ரூ.100 செலுத்தினால் போதும். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள் என, அந்தத் தகவல் கூறுகிறது.
'இது தவறான தகவல். இதைப் பகிர வேண்டாம். இந்த எண், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது' என, பி.ஐ.பி., அரசின் பத்திரிகை தகவல் மையம் விளக்கமளித்துள்ளது.