/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யணும்! சிறப்பு குழு அமைக்க வேண்டுகோள்
/
கட்டுமான பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யணும்! சிறப்பு குழு அமைக்க வேண்டுகோள்
கட்டுமான பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யணும்! சிறப்பு குழு அமைக்க வேண்டுகோள்
கட்டுமான பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யணும்! சிறப்பு குழு அமைக்க வேண்டுகோள்
ADDED : டிச 03, 2024 05:59 AM

பொள்ளாச்சி; தமிழகத்தில், கட்டுமானப்பணிக்கு தேவையான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்ந்துள்ளதாக இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு சங்கத்தினர், புகார் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கிரஷர் உரிமையாளர்கள், 'சிண்டிகேட்' அமைத்து, 10 மாதங்களுக்கு முன் எவ்வித முகாந்திரமும் இன்றி, கட்டுமானப் பொருட்களின் விலையை, 30 சதவீதம் அளவுக்கு உயர்த்தினர். இதனால், கட்டுமானத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது, மீண்டும் கட்டுமான பொருட்களின் விலையை, 45 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளனர். ஒரு ஆண்டுக்குள் கிரஷர் சம்பந்தப்பட்ட கட்டுமானப்பொருட்கள் விலையை, 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தினால் கட்டுமான தொழில் பாதிக்கப்படும்.
கல்குவாரிகள், கிரஷர் யூனிட்டுகள் செயல்படும் நாட்கள், வாரத்தில் நான்கு நாட்களாக மாறியதால், தயாரிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தின் கட்டுமானத்துக்கு சக்கை கற்கள், கிரஷர் உற்பத்தி பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை தேவை அதிகமாக உள்ளது. மேலும், தமிழகத்தின் எதிர்கால கட்டுமான தொழிலுக்கு தேவையான பொருட்களின் கையிருப்பு உறுதி செய்வது அரசின் கடமையாகும்.
எனவே, அரசு கொள்கை முடிவு என காரணம் சொல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்வதை சிறப்பு சட்டம் இயற்றி தடை செய்ய வேண்டும். சக்கை கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்றவை உற்பத்தி செலவை அரசு நிபுணர்கள் அடங்கிய குழு இறுதி செய்ய வேண்டும். அதன்பின், லாபம் சேர்த்து ஆண்டுக்கு இருமுறை விலையை நிர்ணயிக்க வேண்டும்.
அரசு நிர்ணயிக்கும் விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் குவாரிகள் மீது அக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.