/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்வாகன தொழிலில் முன்னேற்றம் கலந்தாய்வு கூட்டத்தில் பெருமிதம்
/
மின்வாகன தொழிலில் முன்னேற்றம் கலந்தாய்வு கூட்டத்தில் பெருமிதம்
மின்வாகன தொழிலில் முன்னேற்றம் கலந்தாய்வு கூட்டத்தில் பெருமிதம்
மின்வாகன தொழிலில் முன்னேற்றம் கலந்தாய்வு கூட்டத்தில் பெருமிதம்
ADDED : நவ 14, 2024 05:09 AM

கோவை: ''சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மின்வாகன தொழிலில் ஈடுபட்டு வருவது, முன்னேற்றமான நிலையை ஏற்படுத்தும்,'' என, மின்சார வாகன தயாரிப்புக்கான ஆலோசகர் அபிமன்யு சிங் பெருமிதம் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.இ., எனப்படும் சிறு, குறு, நடுத்தர பிரிவில் தொழில் துவங்க, ஒற்றை சாளர இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, பல்வேறு துறைகளின் அனுமதியை விரைந்து பெற்று தரும் பணியை தமிழக அரசின், பேம் டி.என்., நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிலையில், கோவையில் கொடிசியா மற்றும் 'பேம் டி.என்.,' சார்பில், மின்வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மின்வாகன உதிரிபாக விற்பனையாளர்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம், கொடிசியாவில் நடந்தது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா தலைமை வகித்தார். கொடிசியா தலைவர் கார்த்திகேயன், செயலாளர் யுவராஜ், பொன்ராம், சிடார்க் அமைப்பை சேர்ந்த மோகன் செந்தில்குமார் மற்றும் 'பேம் டி.என்.,' வர்த்தக வசதியாக்க அலுவலர் கிறிஸ்டோபர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 8 மின்வாகன தயாரிப்பு நிறுவனத்தினர், 40 மின்வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தினர் பங்கேற்று, பொருட்களை கொள்முதல் செய்வது, மின்வாகன தயாரிப்பை விரிவுபடுத்துவது உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மின்சார வாகன தயாரிப்புக்கான ஆலோசகர் அபிமன்யு சிங் பேசுகையில், ''வரும் 2030ம் ஆண்டு, 69 பில்லியன் அமெரிக்க டாலராக, மின்சார வாகன உற்பத்தியின் வளர்ச்சி இருக்கும். இந்த தொழிலில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது, மின்வாகன தொழிலில் முன்னேற்ற நிலையை ஏற்படுத்தும்,'' என்றார்.