/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபீஸ் தடுப்பூசி இருக்க வேண்டும்: மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ADDED : ஜூலை 10, 2025 11:05 PM
கோவை; கோவையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தபட்சம், 40 டோஸ் வீதம் நாய்க்கடிக்கான தடுப்பூசி தயார்நிலையில் வைக்க, மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில், 2024ல் 4.8 லட்சம் நாய்க்கடி சம்பவங்களும், ரேபீஸ் பாதிப்பால், 24 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2025ல் தற்போது வரையில் மட்டுமே, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்களும், 18 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இயலும்.
கேரள மாநிலத்தில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரும் ஒரு சிலர் இறந்த நிலையில், விழிப்புணர்வு செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்திலும் விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறியதாவது:
மாவட்டத்தில், 89 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கான தடுப்பூசி இருப்பு உள்ளன. ஆரம்பர சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் , 40 வீதம் ரேபீஸ் தடுப்பூசியும், கடியின் தன்மை நிலை 1, 2க்கான பிரத்யேக இம்யூனோகுளோபின் ஊசி 10 வீதமும், தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் மொத்தமாக, தற்போது 5400 ரேபீஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளன. ரேபீஸ் தடுப்பூசி சரியாக செலுத்தினால், வைரஸ் தாக்கம் ஏற்படாது. ஆனால், ஒரு டோஸ் போட்டு மற்ற டோஸ் போடாமல் விடுவது, காலம் தாமதிப்பது போன்றவையால் பாதிப்பு ஏற்படலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.