ADDED : பிப் 05, 2024 01:24 AM

அ நிறம் | அளவு
கோவை;தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டிட்டோ ஜாக்) மாநில அமைப்பு சார்பில், 12 கோரிக்கைகளின் அரசாணையை வெளியிடக்கோரி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் தங்கபாசு, ஒருங்கிணைப்பாளர் அரசு உள்ளிட்ட, 50க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
