/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாணவருக்கு பிரதமர் மோடி கவுரவம்
/
கோவை மாணவருக்கு பிரதமர் மோடி கவுரவம்
ADDED : ஜன 29, 2025 01:50 AM

கோவை:என்.சி.சி., மாணவர்களுக்கான சிறப்பு முகாமில், 'பெஸ்ட் கேடட்' விருது பெற்ற, கோவை நேவி பள்ளி மாணவரை, பிரதமர் மோடி கவுரவித்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் என்.சி.சி., மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில், கோவை நேவி சில்ட்ரன் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஷர்துல், என்.சி.சி., ஜூனியர் பிரிவில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினார்.
டில்லியில் நடந்த குடியரசு தின முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் இயக்குனரகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், நாட்டின் சிறந்த 'கேடட்' போட்டியில், தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்கும்,தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரை பிரதமர் மோடி விருது வழங்கி, தங்க பதக்கம் அணிவித்து கவுரவித்துள்ளார்.

