/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருகிறார் பிரதமர் மோடி: மருத்துவ குழுக்கள் ரெடி
/
வருகிறார் பிரதமர் மோடி: மருத்துவ குழுக்கள் ரெடி
ADDED : மார் 18, 2024 12:59 AM
கோவை;பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, இரு மருத்துவக் குழுக்கள், ஒரு சிறப்பு மருத்துவக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று அவர் கோவை வருகிறார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடக்கும், 'ரோடு ஷோ' விலும் பங்கேற்கிறார்.
இதற்காக, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் வருகையை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனை சார்பில், இரு மருத்துவக்குழுக்கள், ஒரு சிறப்பு மருத்துவக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று இரவு, ரெட்பீல்ட்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்க உள்ளார். அங்கும் இதேபோல் மற்றொரு மருத்துவக் குழு இடம் பெற்றிருக்கும்.
இது தவிர, கோவை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணர், இருதயவியல் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட ஆறு டாக்டர்கள், நான்கு நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழுவினர், தயார் நிலையில் இருப்பர்.

