/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் மோடி பிறந்தநாள்; மக்களுக்கு அன்னதானம்
/
பிரதமர் மோடி பிறந்தநாள்; மக்களுக்கு அன்னதானம்
ADDED : செப் 17, 2025 09:23 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சியில், பிரதமர் மோடியின், 75வது பிறந்தநாள் விழாவை பா.ஜ.வினர் கொண்டாடினர்.
பிரதமர் மோடியின், 75வது பிறந்தநாளை முன்னிட்டு, பொள்ளாச்சி பா.ஜ.வினர், சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பா.ஜ. நகர தலைவர் கோகுல்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் துரை, கோவிந்தராஜ், சாந்தி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர பொதுச்செயலாளர்கள் வாசுதேவன், பிரித்திவிராஜ், சேது மற்றும் மகளிர் அணியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி விவேகானந்தா சேவை மையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. அதில், நகர பா.ஜ.வை சேர்ந்த, 10 இளைஞர்கள் உள்ளிட்ட, 50 பேர் ரத்ததானம் வழங்கினர்.பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி, பா.ஜ. முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கான துணிகள், சோப்பு உள்ளிட்ட 'கிட்' வழங்கினர்.
சிறப்பு பூஜை வால்பாறை பா.ஜ., சார்பில், மண்டல் தலைவர் செந்தில்முருகன் தலைமையில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து அ.தி.மு.க., தொழிற்சங்க தலைவர் அமீது மற்றும் பா.ஜ.,நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மார்க்கெட் பகுதியில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், பா.ஜ., மாவட்ட மகளிர்அணி செயலாளர் கனகவல்லி, மண்டல் பொதுசெயலாளர் முகேஸ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வினு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவி உடுமலை அருகே அனிக்கடவில், பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி பா.ஜ., சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பா.ஜ., ஊராட்சி பொறுப்பாளர் மோகன்ராஜ் வரவேற்று, துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், துாய்மை பணியாளர் மற்றும் பொதுமக்கள், 25 பேருக்கு, அரிசி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. பா.ஜ. குடிமங்கலம் ஒன்றிய தலைவர் சற்குணம், அனிக்கடவு, நஞ்சேகவுண்டன்புதுார் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.