sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பெரும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்'

/

'பெரும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்'

'பெரும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்'

'பெரும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்'


ADDED : பிப் 04, 2024 02:19 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பா.ஜ., மாநில பொது செயலாளர் முருகானந்தம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின், இரண்டாவது இரும்பு மனிதராக உள்ள அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை இதுவரை, 180 தொகுதிகளில் முடிந்துள்ளது. மீதமுள்ள, 54 தொகுதிகளையும், பல்லடத்தில் நடக்கும் நிறைவு விழாவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். யாத்திரைக்கு மக்களிடத்தில், குறிப்பாக பெண்கள் இடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நிறைவு விழா பிரமாண்டமாக வரும் 25ம் தேதி பல்லடத்தில் நடக்கிறது. பத்து லட்சம் பேர் கட்சியினர்; பொதுமக்கள் மூன்று லட்சம் என, 13 லட்சம் பேர் கலந்துகொள்ள இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளது. நானுாறு ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடக்க உள்ளது. வாகனங்களை நிறுத்த, 600 ஏக்கர் மற்றும் மக்களை கொண்டு சேர்த்து தங்க வைக்க, 300 ஏக்கர் என, ஆயிரத்து, 300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில், இந்த யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டம் இருக்கும் என நினைக்கிறோம். பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக, திருப்பூரில், வரும் 24ம் தேதி யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். பிரதமர் மோடியை பொறுத்தவரை நெருக்கமான மாநிலம், மிகவும் பிடித்த மாநிலம் தமிழகம்.

நேரடியாக ஆளும்கட்சியை கேள்வி கேட்கும் முதன்மை கட்சியாக பா.ஜ., உள்ளது. புள்ளி விபரத்துடன் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருப்பதில், நுாறு சதவீதம் பொய் தான். குளறுபடிகளின் ஒட்டுமொத்த அம்சமாக தி.மு.க., உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி கெட்டு உள்ளது.

சேவை செய்யக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது. எங்களின் சித்தாந்தாம் வேறு; இது ஒரு இயக்கம். இங்கு யாரும் நிரந்தர தலைவர் கிடையாது. லட்சியமே பிரதானம். அரசியல் நகர்வு அண்ணாமலையை நோக்கி தான் செல்கின்றது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us