/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
/
பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 25, 2025 12:58 AM
கோவை: கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், வட கிழக்கு பருவமழை 146 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. இம்முறை வடகிழக்கு பருவமழை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை பயிர்களில் மகசூல் இழப்பைத் தவிர்க்கும் வகையில், பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர்க்காப்பீடு சந்தாவாக, மக்காச்சோளம் ரூ.545, கொண்டைக்கடலை ரூ.254, சோளம் ரூ.173 செலுத்தி, உரிய காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மக்காச்சோளம், கொண்டைக்கடலை பயிர்களுக்கு வரும் நவ., 30, முதல் டிச., 16ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள், வங்கி கணக்குப்புத்தக நகல், ஆதார் நகல், அடங்கல் முன்மொழிவுப் படிவம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள், இ- சேவை மையங்கள், வாயிலாக சந்தா செலுத்தி, பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.
மழை காரணமாக மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில், நிவாரணம் பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

