/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமரின் சுதந்திர தின அறிவிப்பு நம்பிக்கை தருகிறது! தொழில்துறையினர் வரவேற்பு
/
பிரதமரின் சுதந்திர தின அறிவிப்பு நம்பிக்கை தருகிறது! தொழில்துறையினர் வரவேற்பு
பிரதமரின் சுதந்திர தின அறிவிப்பு நம்பிக்கை தருகிறது! தொழில்துறையினர் வரவேற்பு
பிரதமரின் சுதந்திர தின அறிவிப்பு நம்பிக்கை தருகிறது! தொழில்துறையினர் வரவேற்பு
ADDED : ஆக 16, 2025 09:35 PM

கோவை; அரசு, அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளது; இது தீபாவளி பரிசாக இருக்கும்' என்ற பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பு, கோவை தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
'பொருளாதார முன்னேற்றம்' உலகப் பொருளாதாரத்தில், ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பொருளாதார மேம்பாட்டுக்கு சிறு, குறு தொழில்களின் பங்களிப்பு 31 சதவீதமாக இருக்கிறது. பிரதமரின் தற்போதைய அறிவிப்பு அமலுக்கு வரும் போது, பங்களிப்பு கூடுதலாகும். நான்காவது இடத்தில் இருக்கும் பொருளாதார இடம், மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். -கார்த்திகேயன், தலைவர், கொடிசியா.
'நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்' பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. 2017ம் ஆண்டில், ஜி.எஸ்.டி., அமலாக்கத்தில் இருந்து இன்று வரை, எண்ணற்ற குழப்பங்கள் நிறைந்துள்ளன. சிறு, குறு தொழில் முனைவோர் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இச்சூழலில், தீபாவளிக்கு ஜி.எஸ்.டி.,யில் பெரும் மாற்றம் கொண்டு வருவதன் வாயிலாக, தொழில் துறையில் பெரும் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று அறிவித்துள்ளது, பெரும் மகிழ்ச்சி தந்துள்ளது. தொழில் துறையினரின் பிரச்னைகள் தீரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். - ஜேம்ஸ், தலைவர், 'டேக்ட்'
'வர்த்தகர்களுக்கு பயன்' சீர்திருத்தங்கள் தொடர்பான, பாரத பிரதமரின் அறிவிப்பை, இந்திய வர்த்தக சபை வரவேற்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள், தொழில்முனைவோருக்கு, குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பயனளிக்கும். இந்த சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். இவை இந்திய பொருளாதாரத்தில், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். - ராஜேஷ் லந்த், தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை
'போட்டித்திறன் பெருகும்' ஜி.எஸ்.டி., 2.0 என்ற ஒரு முக்கிய அறிவிப்பை, சுதந்திர தின உரையில் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். இது மிகவும் வரவேற்புக்குரியது மட்டுமல்லாமல் , ஜி.எஸ்.டி., சீரமைக்கப்பட்டு, இன்வெர்டெட் வரிகள் சரி செய்யப்படும் பட்சத்தில், செயற்கை பஞ்சு ஜவுளி உற்பத்தித் துறை, மிகுந்த பலன் பெற்று போட்டித்திறனை பெறும். அன்றாட உபயோகப் பொருட்கள் வரி குறைக்கப்படும் பட்சத்தில் , உள்நாட்டு டிமாண்ட் அதிகரித்து, பொருட்களின் தேவை சீராக அதிகரிக்கும். - பிரபு தாமோதரன் கன்வீனர், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,)