/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிர் காக்கும் ஹீரோக்களின் உயிர் காக்க சாதனம்
/
உயிர் காக்கும் ஹீரோக்களின் உயிர் காக்க சாதனம்
ADDED : ஆக 16, 2025 10:29 PM
- சேதுராமன் சாத்தப்பன் -
'பரேட்டோ ட்ரீ' (Pareto Tree), என்றொரு ஸ்டார்ட் - அப்; அதென்ன 'பரேட்டோ' என பலருக்கும் கேள்வி எழலாம்; தோராயமாக 80 சதவீத விளைவுகள், 20 சதவீதக் காரணங்களில் இருந்து வருகின்றன என்பது 80/20 எனப்படும் 'பரேட்டோ' விதி.
தேடல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்கள், உயிரை பணயம் வைத்து கட்டட இடிபாடுகள்; எரியும் தீக்குள் செல்ல வேண்டியுள்ளது.
இவர்கள் அணிவதற்கான பாதுகாப்பு தீர்வுகளை இந்த ஸ்டார்ட்- அப் வடிவமைத்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள்; தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள் பாதுகாப்புக்கான அதிநவீன தீர்வுகள், நாள்தோறும் வாழ்க்கையை பணயம் வைக்கும் ஹீரோக்களுக்கு தைரியமூட்டுகின்றன. இறப்புகள் குறைப்பு
- ஒரு சக தீயணைப்பு வீரர் காணாமல் போகிறார் அல்லது எரியும் கட்டமைப்பில் சிக்கிக் கொள்கிறார். அப்போது, ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. விரைவான மற்றும் பயனுள்ள மீட்பு முக்கியமானது.
இந்த ஸ்டார்ட்-அப் தயாரித்த சாதனங்களை வீரர்கள் அணிவதால் 50 சதவீத இறப்புகள் குறைக்கப்படுகின்றன; காணாமல் போவதாலோ அல்லது திசைதிருப்பப்படுவதாலோ ஏற்படும் இறப்புகள், தீ விபத்தில் சிக்கிக் கொள்வதால் ஏற்படும் இறப்புகள் குறைகின்றன.
சவாலான சூழலிலும்... ஹீரோ சர்ச் வி1 பாதுகாப்பு சாதனம் மேம்பட்ட தொடர்ச்சியான மோஷன் சென்சிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது; எந்த அசைவும் கவனிக்கப்படாமல் இருப்பதை தவிர்க்கிறது.
இது காணாமல் போன அல்லது மயக்கம் அடைந்த தீயணைப்பு வீரர்களை விரைவாகக் கண்டறிய உதவுகிறது. சவாலான சூழ்நிலைகளில் கூட, பாதுகாப்பு கவசங்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்பதை இந்த சாதனம் உறுதி செய்கிறது.
ஒவ்வொரு திசையிலும் பிரகாசமான சிவப்பு விளக்குகள் நொடிக்கு ஒரு முறையும் ஒளிரும்; அடர்த்தியான புகையில் மாட்டிக் கொண்டு இருக்கும் வீரர்களை மீட்க செல்பவர்கள் சரியான இடத்திற்கு செல்ல உதவுகிறது.
'பாதுகாப்பான எதிர்காலம்' இந்த சாதனத்தின் பேட்டரி ஒரே சார்ஜில் 7 நாட்கள் இயக்க நேரத்தை வழங்குகிறது; முக்கியமான செயல்பாடுகளின் போது நீண்டகால செயல்திறனை உறுதி செய்கிறது. இது 250 கிராம் எடையுடன் எளிதில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
'நாங்கள் தயாரிப்புகளை மட்டும் உருவாக்கவில்லை; பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குகிறோம்' என்று இந்நிறுவனம் அறைகூவல் விடுக்கிறது. தொடர்புக்கு: www.paretotree.com; போன்: 9716456929, 9716456929
சந்தேகங்களுக்கு: இ- மெயில்: Sethuraman.sathappan@gmail.com; அலைபேசி: 9820451259. இணையதளம்: www.start upandbusinessnews.com

